சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Tuesday, June 30, 2009

பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் : உமாபாரதி!!


பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார் என்று பாரதீய ஜனசக்தி கட்சித் தலைவி உமா பாரதி கூறியுள்ளார். இதனால் தனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட லிபரன் விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணை அறிக்கையை பிரதமரிடம் இன்று அளித்தது குறித்து, பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த உமாபாரதி, "பாபர் மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயார். ஒரு நல்ல கமாண்டரைப் போல் இதனைக் கூறுகிறேன். இதனால் தன்னைத் தூக்கிலிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை" என்று கூறினார்.
17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை அறிக்கை பிரதமரிடம் அளிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்களை சமாதானப் படுத்தவே என்றும் அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையை அடுத்து 20 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு ஒருவரைக் கூட குற்றம் சாட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் மன்னிப்புக் கோரக் கூடாது என்றும் அவர்கள்தான் அதிகமான மக்களை அயோத்திக்கு கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

Saturday, June 27, 2009

முஸ்லிம்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?


சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.
எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.
இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.
பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் நொறுக்கி இருக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.
வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.
400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், அது பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.
அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் உள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks to -http://www.tmmk-ksa.com/content/news/News_Item.asp?content_ID=469

Wednesday, June 10, 2009

பள்ளிவாசல்களில் தாக்குதல்; தேவை உடனடி பரிகாரம்!


முஸ்லிம்கள் தங்களின் ஒப்பற்ற இறைவனை வணங்குவதற்காக எழுப்பிக்கொண்டவைகள் தான் பள்ளிவாசல்கள். இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமின்றி முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுமிடம். இத்தகைய பள்ளிவாசல்கள் மீது அதுவும் தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்துவது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவதும் , இந்த தாக்குதல்களின் பல நூறு பேர் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய சுதந்திர போராட்ட்டத்தின்போது ஜூம்மா மேடைகள் சுதந்திர தாகத்தை ஊட்டும் காரணியாக திகழ்வதை கண்ட வெள்ளையர்கள், ஒரு தொழுகையின் போது வெறியாட்டம் ஆடி முஸ்லிம்களை கொன்ற அந்த மஸ்ஜித் ‘கூன் மஸ்ஜித்’[ரத்தப்பள்ளி] என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழீழம் பெறப்போகிறோம் என்று புறப்பட்டு, தமிழ்பேசும் சக முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த போது ரத்த சகதியாக்கிய புலிகளின்[?] சாகசத்தை, இன்றும் காத்தான்குடி பள்ளிவாசல் ‘கறைபடிந்த’ சான்றாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஷியா-சன்னி பள்ளிவாசல்களில் தொழுகையின் போது குண்டுகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் இஸ்லாம் காட்டித்தராத பிரிவுகள் என்ற பெயரால் முஸ்லிம்கள் பிரிந்ததுதான்.

ஈரானில் சமீபத்தில் பள்ளிவாசலில் தொழுகையின்போது குண்டு வெடித்து பலர் பலியாகி, உடனடியாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டது ஈரான் அரசு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தலையிலேயே குற்றமும் சுமத்தப்பட்டு இன்று இந்த வழக்கு நிலையும் ‘வெடிக்காதகுண்டு’ போல் அமைதியாக உள்ளது.

நேற்று தாய்லாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையின்போது புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக சுட்டதில்பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறாக உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகளின் இலக்காக திகழக்கூடிய பள்ளிவாசல்கள் விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.குறிப்பாக இந்தியாவில் முக்கியமான கோயில்களுக்கு பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்களை நியமிப்பதோடு அது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தும் அரசு, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் கேமராக்கள் அமைப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நினைத்தால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் . பல லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிவாசல் எழுப்புபவர்கள், சில ஆயிரம் செலவு செய்து கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பள்ளிவாசலில் அசம்பாவிதம் நடப்பதை பெருமளவு குறைக்கமுடியும். அப்படியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட கேமராக்களின் துணை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தமுடியும், அதோடு அடித்தவனும் முஸ்லிம்-அழுபவனும் முஸ்லிம் என்ற பாணியில் நம்மீதே காவல்துறை பழிபோடாமல் பாதுகாக்க முடியும். மேலும், சமுதாய வாலிபர்கள் அதிக அளவில் பள்ளிவாசலோடு தொடர்பில் இருக்கவேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதோடு நம்பணி நிறைவடைந்து விடாது. அங்கு இறைவனை வணங்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம்பணிதான் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.

Thanks : நிழல்களும்-நிஜங்களும் - முகவை எஸ்.அப்பாஸ்

Tuesday, June 9, 2009

பொது சிவில் சட்டம் வேண்டும் ஆர்.எஸ்.எஸ் கேம்பில் உச்சநீதி மன்ற முன்னாள் நிதிபதியின் வாழ்த்துச் செய்தி:-

இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியான கேரளாவைச் சேர்ந்த கெ.டி. தோமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில், பாஜக நீண்டகாலமாக கோரி வரும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான நீதிபதி கெ.டி. தோமஸின் அறிக்கை வாசிக்கப்பட்டது.ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொள்ள கெ.டி. தோமஸ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக நேரடியாக கலந்து கொள்ள முடியாமையைத் தெரிவித்து, அவரின் வாழ்த்து கடிதத்தை அனுப்பியிருந்தார். கேம்பில் அவருக்குப் பதிலாக அவர் அனுப்பிய வாழ்த்து கடிதம் படிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:"இந்திய அரசியல் சட்டத்தின் 44 ஆவது பிரிவில் கூறப்படும் ஆலோசனைகளை நடைமுறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்களை இனவாதிகளாக முத்திரை குத்துவது வேதனைக்குரியது. நாட்டில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராக ஏற்றுக் கொள்ளத் தக்க காரணங்களைக் கூறுவதற்கு எவராலும் முடியாது. மதத்தைத் தனிமனிதன் சார்ந்தே காண வேண்டும். ஒவ்வொருவரும் இந்தியர் என்பதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்விஷயத்தை நாட்டு மக்களுக்குப் புரிய வைக்க ஆர்.எஸ்.எஸ் முன்வர வேண்டும்" என்று அவ்வாழ்த்தில் கூறியுள்ள அவர், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்களையும் விமர்சித்துள்ளார்.
நன்றி :- பாலைவனத் தூது