சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Monday, February 2, 2009

சங்பரிவாரின் கரசேவையும்-போரா முஸ்லிம்களின் கரசேவையும்!




போரா முஸ்லிம்களின் கரசேவை... மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பொதுமக்களின் உடல் உழைப்பைமையமாக வைத்து ஏரி தூர்வாரும் பணி கடந்த சில வாரங்களாகநடைபெறுகிறது. படித்தவர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள் என்றுஎல்லா தரப்பினரும் இதில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைபோரா முஸ்லிம்கள் படையாகத் திரண்டுவந்து உற்சாகமாக சேவை செய்த காட்சி.
கீழ் படம் மற்றும் செய்தி; தினமணி.


நன்றி -நிழல்களும் நிஜங்களும்

Tuesday, January 27, 2009

மகாராஷ்ட்ரா; இது இந்தியாவின் மாநிலமா? இந்துத்துவாவின் மாநிலமா?


இந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை.இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில மாதங்களுக்குமுன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்த ராஜ்தாக்கரே, இருதினங்களுக்குமுன் ஒரு பொதுக்கூட்டத்தில் வட இந்தியர்களை தாக்கிப்பேச, அதையே உத்தரவாக எடுத்துக்கொண்ட அவரின் நவநிர்மான் கட்சியினர், நேற்று நாசிக்கில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியரசுதினம் கொண்டாடிக்கொண்டிருந்த வட இந்தியர்களை தாக்கியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. மேலும்,இது காவல்துறையின் கண்முன்னேநடந்த வன்முறை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 23.அன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒற்றை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய வழக்கில் சிவசேனா எம்.பி.ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்டம் பால்தாக்கரே,ராஜ்தாக்கரே கும்பலுக்கு வளைகிறதோ என்ற எண்ணமும், மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் உள்ளதா? என்ற சந்தேகமும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

thanks 2 :நிழல்களும் நிஜங்களும்

Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு


அன்பர்களே,
மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

நன்றி--நிழல்களும் நிஜங்களும்

Thursday, December 25, 2008

அன்பர்களே,
உலகத்தில் நமக்கு ஒரு அங்கீகாரம்/அதிகாரத்தை அடைவது என்பது வரவேற்கத்தக்கதே! ஆனால் அதை அடையும் வழி இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் முஸ்லிம்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளின் உட்பிரிவாகவே செயல்படுவதைப்பார்க்கிறோம். எனவேதான் இவர்கள் ஆதரிக்கக்கூடிய கட்சிகள் இஸ்லாத்திற்கோ/முஸ்லிம்களுக்கோ விரோதமாக நடந்தாலும் இவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ விசயங்கள் நாட்டில் அரங்கேறியபோது தனது பதவியை ராஜினாமா செய்யாத சகோதரரர் காதர்மொய்தீன்அவர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கருணாநிதி சொன்னவுடன் தனது பதவியைராஜினாமா செய்தார். செய்துதான் ஆகவேண்டும் ஏனெனில், அவர் தி.மு.க.எம்.பி.யாவார்.

இதுமட்டுமன்றி, முஸ்லீம் அமைப்புகள் பிரசமுதாய மக்களிடமும் ஒரு நற்பெயரை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இஸ்லாமிய வட்டத்தைதாண்டி செயல்பட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. காதற்மொய்தீன் அவர்கள் வேலூர் அருகே சாமியாரை சந்தித்ததும், இந்துமுன்னணி நிகழ்ச்சியில் பேசியதையும் குறிப்பிடலாம்.

மேலும், பிற சமுதாய மக்களின் பண்டிகைக்காலங்களில் இவர்கள் வாழ்த்து அறிக்கை வெளியிடுவார்கள். அதில்கூட ஒருதலைவர் வரம்புமீறி, 'கல்வியின் அன்னை சரஸ்வதியை நினைவுகூறும் இந்நாளில்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற சமுதாய மக்களுக்கு வாழ்த்துகூறுவது ஒருபக்கம் இருக்கட்டும்! நமது பெருநாள்களில் வாழ்த்து கூற நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும், நமது சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாம் ஈத் முபாரக் சொல்லிக்கொள்கிறோம்.
பிற சமுதாய மக்களை கவர வேண்டும் என்ற நிலைப்பாடு நம் சமுதாய தலைவர்களில் ஒருவரை எங்கேபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை மேலே உள்ள படத்தைப்பாருங்கள். எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல்நபி[ஸல்] அவர்களுக்கே நினைவஞ்சலி செலுத்துமாறு மார்க்கம் கட்டளையிடாதபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் சமாதியில் அஞ்சலி செலுத்தவைத்தது எது..? பதவி போதைதானே!

தனக்கென ஒரு அமைப்பு வைத்திருப்பவர்கள் நிலையே இதுவென்றால், பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தனது படத்தின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மக்கள் மனதில்பதியவைத்த விஜய்கான்[?] கட்சியை சேர்ந்த முஸ்லிம்களின் விளம்பரம்;

அகிம்சையை சொன்னார் காந்தி

ஈகையை சொன்னார் நபிகள்
இவை அனைத்தையும் சொன்னார் கேப்டன்.
தனது போலி தலைவரை உய்ர்த்திப்பிடிப்பதற்காக உண்மைத்தலைவர்,உத்தம தலைவர் நபி[ஸல்]அவர்களை பின்னுக்கு தள்ளியதை பார்த்தீர்களா! இந்த கேப்டன்[?] சொல்லாததை,சொல்லமுடியாத அத்துணை போதனைகளையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் நபிஸல்]அவர்கள்.
எனவே, அரசியலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே, நீங்கள் பிற சமுதாயமக்களை கவரவேண்டுமேனில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யுங்கள். வரவேற்கிறோம். அதைவிடுத்து மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்திற்காக சத்தியஒளியை மறந்துவிடாதீர்கள்!
படங்கள்;நன்றி தினத்தந்தி
நன்றி: நிழல்களும் நிஜங்களும்

Sunday, December 14, 2008

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.

This picture is really worth a thousand words பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.
அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, December 10, 2008

இணையத்தில் ஆர்.எஸ். எஸ்

இணையத்தில் ஆர்.எஸ். எஸ் காரர்களின் ஆக்கிரமிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முன்பு வங்கி ஊழியர்களாய் இருந்தனர். இப்போது, அவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்கின்றனர்.வங்கி ஊழியர்களாய் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முஸ்லிம்களை அந்நியச் செலவானித் துறைக்கு காட்டிக் கொடுத்தனர்.இப்போது, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் பார்ப்பனர்கள் முஸ்லிம்களின் மின் அஞ்சல், வலைப்பதிவு ஐடிகளை ஹேக்கிங் செய்கின்றனர்.அவர்களது மின் அஞ்சலை ஹேக் செய்து அவர்கள் அனுப்புவது போல பிறருக்கு மின் அஞ்சல் அனுப்புன்றனர். அவர்களது முகவரிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு தவறான தகவல்களை மின் அஞ்சல் செய்கின்றனர்.பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை மோசம். இப்போதுள்ள வலைப்பதிவுகள், திரட்டிகள் அப்போது கிடையாது.தின மணி இணையத்தில் விவாதக் குழு இருக்கும். அது போல, தின பூமி. தினகரன் இணையத் தளங்களில் சாட்டிங் இருக்கும்.இங்கு விவாதிக்க வரும் முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டி விரட்டி விடுவர்.அதையும் தாண்டி சகிப்புத் தன்மையுடன் விவாதிப்பவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க முடியும்.இப்போது நிலைமை பரவாயில்லை.தமிழ் முஸ்லிம்கள் வலைப்பதிவுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அதனை எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.இவற்றை தேசவிரோதமானவையாகச் சித்தரித்து கட்டுரை எழுதுகின்றனர்.இந்த நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதிகள் ஆர்.எஸ். எஸ் காரர்கள் தான்.ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நியாயப் படுத்தும் மொட்டைத் தலையன் சோ போன்ற அயோக்கியர்கள் தான் முஸ்லிம்களிடம் உருவாகும் தீவிரவாதத்துக்கும் காரணம்.வெளி நாடுகளில் உள்ள தூதரகங்களில், பா.ஜ.க ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ் காரர்களை பணி நியமனம் செய்து விட்டது.இவர்களை காங்கிரஸ் அரசு களையெடுக்க வேண்டும்.மத வேற்றுமை பாராமல் அனைவரிடமும் கலந்துறவாடுவோம்.ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை இந்து சமய நடுநிலையாளர்களின் துணையுடன் களையெடுப்போம்.இணையத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செய்யும் சட்டவிரோத செயல்களைப் பட்டியலிட்டு மாநில உளவுத்துறைக்கும், மத்திய உளவுத் துறைக்கும் தெரிவிப்போம். பதிந்தது: அருளடியான் செவ்வாய், டிசம்பர் 09, 2008http://tamilmuslim.blogspot.com/2008/12/blog-post_09.html

Wednesday, December 3, 2008

வெடி குண்டு சப்ளை செய்த சாமியார் போலீசாரால் கைது

திருச்சி: திருச்சி அருகே பிரபல ரவுடிகளுக்கு வெடி குண்டு சப்ளை செய்த சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.

தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி..
http://thatstamil.oneindia.in/news/2008/12/01/tn-swamiji-arrested-for-supplying-bombs-to-rowdies.html