சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Tuesday, November 4, 2008

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்


....தக்க நேரத்தில் நாடு பிழைத்தது!

இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்.... கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.

அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும் தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!காதலிச்ச பொண்ணு திரும்பிப் பார்க்கவில்லை. பாவம், மனசு நொந்து போயி இந்த மாதிரி ஒரு காரியம் செய்து விட்டார். மற்றபடி இவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல பிள்ளை"இது ஒரு திரைப் படத்தின் வசனக் காட்சியல்ல. இங்குத் தரப் பட்டுள்ள.

'கைது-விடுதலை:3'இன் க்ளைமாக்ஸ் வசனம்தான் அது.கைது-விடுதலை : 1சில மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியைக் கொல்லத் தபால் குண்டு அனுப்பியதாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற முஸ்லிம் இளைஞரைப் பிடித்துக் கொண்டுபோய் 20 நாட்களுக்கும் மேலாகக் கஸ்டடியிலும் சிறையிலும் வைத்துக் கேரளக் காவல்துறையினர் கொடுமைப் படுத்தினர். நிரபராதியான அவரின் தாயையும் தந்தையையும் உறவினர்களையும் காவல்துறை கொடூரமாக வேட்டையாடியது.

ஆனால், தீவிர விசாரணையின் பின்னர் உண்மையான குற்றவாளியான ராகேஷ் சர்மா என்பவரைக் காவல்துறை கைது செய்தது. அப்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கேரளக் காவல்துறை கூட்டி, "பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ராகேஷ் சர்மா, மனநிலை பாதிக்கப் பட்டதாலேயே அவ்வாறு அனுப்பினார்" என காவல்துறை 'விளக்கம்' கூறி நற்சான்று வழங்கியது.கைது-விடுதலை : 2அதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல ஒரு மிரட்டல் விடுத்த பாஜகவின் மாணவர் அணி (ஏ.பி.வி.பி) உறுப்பினரான கோழிக்கோட்டைச் சேர்ந்த தேஜஸ் என்பவரது வழக்கையும் காவல்துறை மிகச் 'சாமர்த்தியமாக'க் கையாண்டு தேஜஸை நிரபராதி என விடுவித்தது.

கைது-விடுதலை : 3கரூரில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஊழியரின் மகனான அருண் சூர்யா என்பவரை, ஜனாதிபதி, இந்திய உளவுத்துறை 'ரா'வின் தலைவர், ஐ.பி அதிகாரிகள் ஆகியோருக்கு மிரட்டல் மின்மடல் அனுப்பியதற்காக காவல்துறை சென்ற வாரம் கைது செய்திருந்தது.தகவலறிந்து மாநகரக் காவல்துறை ஆணையரது அலுவலகத்துக்கு அருண் சூர்யாவின் பெற்றோர் வந்தனர். அவர்கள் காவல்துறை உயரதிகாரிகளுடன் பல மணி நேரம் 'ஆலோசனை' நடத்தினர். அதனைத் தொடர்ந்தே, பத்திரிகையாளர் கூட்டத்துக்குக் காவல்துறை ஏற்பாடு செய்து, கண்ணன் என்ற அருண் சூர்யாவின் கள்ளம் கபடமில்லாத குணத்தைப் பற்றி இந்தச் செய்தியின் முதற் சொற்றொடரில் நீங்கள் படித்தவாறு விவரித்தது."நவம்பர் 14 க்குள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைக் கொலை செய்வோம்" என்றும் "மேலும் பல தலைவர்களைக் கொலை செய்யும் திட்டம் உண்டு" எனவும் "ஜனாதிபதி உட்பட அனைத்துத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை!" எனவும் மின் மடல் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார் அருண் சூர்யா.

கடந்த அக்டோபர் 24 மாலை 5.15க்கு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்மடலில், "கொச்சி மற்றும் சென்னையில் 4 வெடிகுண்டுகள் வீதம் வைக்கப் பட்டுள்ளன" எனவும் "விரைவில் அவை வெடிக்கும்" எனவும் அவரது மின்மடலில் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.இதற்கு முன்னரும் இதே போன்ற பல மிரட்டல் மின்மடல்கள் வந்திருப்பினும் இம்முறை சற்றுத் தீவிரமான மிரட்டலுடன் சென்னை மற்றும் கொச்சியில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக வந்ததால், ஜனாதிபதி மாளிகை உடனடியாக மிரட்டல் மடல் விவரத்தை ஐ.பி, கேரள, தமிழக உள்துறைச் செயலர்களுக்கு அனுப்பி இருந்தது.

இம்மிரட்டல் மின்மடலை அனுப்பி, பிடிபட்டிருந்த அருண் சூர்யாவை, "எந்த விதமான தீவிரவாத குழுக்களுடனோ அமைப்புகளுடனோ தொடர்புடையவர் அல்ல எனவும் விளையாட்டிற்காகத்தான் அவ்வாறு ஒரு மின்மடல் அனுப்பியதாகவும்" கேரளக் காவல்துறை ஜனாதிபதி மாளிகைக்குக் கொடுத்த தகவலில் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அனுப்பப்பட்ட மின்மடலில் தெரிவிக்கப் பட்டிருந்த மிரட்டலைக் கண்டு பயப்பட ஏதும் இல்லை எனவும் கேரள காவல்துறை உறுதி கூறியுள்ளது.காதல் தோல்வியினால் விரக்தியடைந்த அருண் சூர்யா, காதலியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக 'ரஹ்மத்துல்லாஹ் பரகத்' என்ற முஸ்லிம் பெயரில் மெயில் அக்கவுண்ட் திறந்ததேன்?முஸ்லிம்கள் மட்டுமே பயன் படுத்தும் அரபுமொழிச் சொற்கள் சிலவற்றை மிரட்டல் மின்மடலின் இறுதியில் இணைத்ததேன்?தீவிரவாத மிரட்டல் விடுத்த அருண் சூர்யாவை, "நல்லப் பிள்ளை; நல்லக் குடும்பத்துப் பிள்ளை; மனவேதனையில் அப்படி செய்து விட்டான்; அல்லாமல் இதன் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இல்லை"

என நற்சான்றிதழ் வழங்கும் காவல்துறையிடம் இதற்கான பதில்கள் இல்லை!இதே குற்றத்திற்காக ஒரு முஸ்லிம் பிடிபட்டிருந்தால்:அவ'னை' முகத்தை மூடி,பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி,ஆணி, சுத்தியல், டார்ச் பேட்டரி போன்ற 'பயங்கர ஆயுதங்கள்' நிரப்பப்பட்ட ஒரு டேபிளின் முன் அவ'னை' நிறுத்தி வைத்து ஃபோட்டோ எடுத்து,அல்-காயிதா முதல் லஷ்கரே தய்யிபா வரை தொடர்புடையவ'ன்' என்றும், இந்தியத் தலைவர்களைக் கொல்வதற்குக் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி எடுத்து வந்தவ'ன்' என்றும்தக்க நேரத்தில் எடுக்கப் பட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நாட்டின் தலைவர்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பார்கள்.கொஞ்சமும் வெட்கமின்றி நடுநிலை(!) நாளிதழ்களும் அவற்றைப் பிரசுரிக்கும்.நல்லவேளை, பிடிபட்டவர் நல்ல குடும்பத்து நல்ல பிள்ளையாக இருந்ததால் நாடு பிழைத்தது!நல்ல குடும்பத்து நல்ல பிள்ளைகள்!.

Sunday, November 2, 2008

குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது


இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.

சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன.

இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர் எனக் கருதிய ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களை அழித்தொழிக்கக் கிளம்பியது. அவர்கள் வேறுயாரும் அல்ல. இந்து மதவெறிஊட்டப்பட்ட குஜராத் மாநிலப் போலீசார்தான். பிணங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் உழைக்கும் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் முகம்மது நகர் எனும் சேரிப் பகுதியில் போலீஸ் பட்டாளம் புகுந்தது. எந்தவொரு விசாரணையும் இன்றி, அங்கிருந்தவர்களின் மேல் போலீசுப்படை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனான அசாருதீனின் நெற்றியில் குண்டு பாய்ந்து, கழுத்து வழியாக வெளியேறியது. இரத்தம் பீறிடக் கூக்குரலிட்டவாறே அசாருதீன் கீழே சரிந்தான்.

துப்பாக்கிச் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து சிறுவனின் அலறலையும் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அவனது தாய் சகிலா பானுவோ, நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடியிருப்பெங்கும் போலீசார் வெறித்தனமாக மக்களைப் பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்த அந்தப் பகல் வேளையில் எதிரி நாட்டுக்குள் படையெடுத்த இராணுவத்தைப் போல கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் தாக்கினார்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சுலைகா என்ற வயதான பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். பல பெண்களுக்கு கைகளிலும், கால்களிலும் குண்டடிகள் பட்டன.

முகம்மது ரபீக் எனும் இரயில்வே தொழிலாளி ஒருவர் அந்நேரம் பார்த்து தனது சைக்கிளில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிய போலீசாரிடம், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறித் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் பலனில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்தக் குடியிருப்பிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்த பிறகுதான், போலீசின் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நின்றது. போலீசைத் தொடர்ந்து வந்த துணை இராணுவத்தினர், போலீஸ் நடத்திவிட்டுச் சென்ற தாக்குதலால் அதிர்ச்சியுற்றவர்களாக, அடிபட்டுக் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள்தான் அசாருதீனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். ஆனால் அவர்களே, அசாருதீன் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே போட்டுவிட்டனர்.

அலுமினிய வார்ப்படத் தொழிலாளியான அசாருதீனின் தந்தை ஷேக் இமாமுதீன் தனது குடியிருப்பில் நடந்த போலீஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தார். தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு துடித்தார். பின்னர் அங்கு வந்த போலீசு உயரதிகாரிகள் மூலம் ஒரு ஆம்புலன்சைக் கெஞ்சிப் பெற்றுக் கொண்டு தனது மகனை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு அசாருதீனைப் பரிசோதித்த மருத்துவர்களோ, அவன் இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் பிணவறைக்குப் பக்கத்தில் கிடத்தப் பட்டிருந்த தனது மகனின் உடலுக்கருகில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார் இமாமுதீன். திடீரென அசாருதீனின் உடலில் அசைவு தென்பட்டது. உடனே மருத்துவர்களிடம் ஓடி, தனது மகனுக்கு சிகிச்சை தரக் கோரினார். மகனை இழந்த துக்கத்தில் பிதற்றுவதாகக் கருதி அக்கோரிக்கையை மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினர். இமாமுதீன் அவர்களது காலில் விழுந்து கெஞ்சி தனது மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார்.

இரக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் அசாருதீன் உயிருடனிருப்பதை அறிந்து, அவனுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மதத்தால் இந்துக்களான அவர்கள், மிகுந்த போராட்டத்திற்கிடையே அசாருதீனின் உயிரைக் காப்பாற்றினர். அவனது தாயும் மற்றொரு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு, இருவரும் வீடு திரும்பினார்கள்.

அசாருதீன் உயிர் பிழைத்த போதிலும், அவனால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவோ, தானே உணவருந்தவோ கழிவறைக்குச் செல்லவோ முடியாது. தீராத தலைவலியும், கண்பார்வைக் குறைவும், ஞாபக மறதியும் அச்சிறுவனை வாட்டின. மருந்துமாத்திரைகள், சிறப்பான சத்துணவுகள், சிகிச்சைக்கான செலவுகள் பெரும் சுமையாகி அவனது பெற்றோரை வதைத்தன. மகன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தால், இமாமுதீன் தனது ஆலையில் "ஓவர்டைம்'' வேலை செய்தும், ஓய்வின்றி இதர சில்லறை வேலைகளைச் செய்தும் இச்செலவுகளை ஈடேற்றினார். தங்களது உணவுச் செலவுகளை பெரிதும் குறைத்துக் கொண்டு, அசாரின் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் பலனாகவும், பெற்றோரின் பாச அரவணைப்பாலும் அசார் மெதுவாக எழுந்து நின்று நடக்கத் தொடங்கினான்.

படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளியான இமாம், தனது மகனை சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். குண்டடிபட்டு அதிசயமாக உயிர் பிழைத்து, ஐந்தாண்டுகளாக நடைபிணமாகக் கிடந்து, இன்று மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ள அசாரை கைத்தாங்கலாக அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அசாருக்கு தற்போது 17 வயது. பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் சிரமப்படுகிறான். நடக்கும்போது சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறான். இருப்பினும், அவன் மற்ற சிறுவர்களோடு பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது அசாரின் பெற்றோர்களது துயரமும் வேதனையும் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

தனது மகனையும், மனைவியையும் காரணம் ஏதுமின்றிச் சுட்ட போலீசாரின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் இமாம். ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆனால், போலீஸ் தரப்பில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசாருதீனும் அவனது தாயாரும், இன்னும் கொல்லப்பட்ட, காயமடைந்த எல்லோரும் கூட்டமாக அருகிலிருந்த இந்துக் கோவில் ஒன்றைக் குண்டுவீசித் தகர்க்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களைச் சுட்டதாகவும் குற்றஞ்சுமத்துகிறது, அவ்வழக்கு.

தனது மகன் சுடப்பட்டபோது, அவனுக்கு இந்து, முஸ்லீம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது எனக் கூறும் இமாமிற்கு, அவனைச் சுட்ட போலீசார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது.

குஜராத் மண்ணில் முஸ்லிம் மதத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக வதைபடும் இலட்சக்கணக்கானவர்களின் துயரத்தில் ஒருதுளிதான், அசாருதீனின் அவலம்.

அசாருதீனைப் பெற்ற இமாமுதீன் குடும்பத்தைப் போலவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முகம்மது நகர் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் குடும்பங்கள் ஏராளம். முகம்மது நகரில் கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம்கள், ஐந்தாண்டுகளுக்கு எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் வதைபட்டனர். போலீசு தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் எதையும் காட்டாததால், ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, பொய்க்குற்றம் சாட்டி சிறையிலடைத்த கொடுஞ்செயலுக்காக எந்தவொரு போலீசுக்காரனும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.

இதோ, அசாருதீன் தனது வேதனைகளை மறைத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கிறான். அவனுக்கு நேர்ந்துள்ள துயரத்துக்கும் வேதனைக்கும் காரணம் யார் என்பதை உணர்ந்து போராடுவதுதான், அசாருதீன் மீது நாம் காட்டும் பரிவுக்கு உண்மையான பொருளாக இருக்க முடியும்.

("தி ஹிந்து'' நாளேட்டில் (செப்.7,2008)
ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள "அசாரின் கதை''யின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்).




ஒரு ஆர் எஸ் எஸ் காரனின் விஷமம்

ஒரு RSS - காரனின் தஞ்சை,திருவாரூர்,காரை ,நாகைமாவட்ட விசம பயண பொய் தகவல் ....
தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது அக்ரஹாரங்களில் நாங்கள் கண்ட காட்சிகள்தான். அக்ரஹாரங்களில் கோயில்கள் எல்லாம் இடிந்த மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. பர்தா அணிந்த பெண்களும், குல்லா, லுங்கி அணிந்த தாடி வளர்த்த ஆண்களும்தான் அங்கு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வீக மணம் கமழும் தஞ்சை மண்டலத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகூர், திருவாரூர் போன்ற முக்கியமான நகரங்களில் உள்ள அக்ரஹாரங்கள் இஸ்லாமிய மயமாகிவிட்டன. தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகிலுள்ள சக்கராபள்ளியில் அக்ரஹாரம் இன்று ஹாஜியார் தெருவாகவும், காயிதே மில்லத் தெருவாகவும் மாறிவிட்டன. இங்குள்ள அக்ரஹாரத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் நடமாட முடியாதாம்.இந்த சக்கராப்பள்ளிக்கு அருகில் ராஜகிரியில் மிகப்பெரிய அக்ரஹாரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மற்ற ஊர்களில் அக்ரஹாரங்களில் கோயில்களாவது எஞ்சியிருக்கின்றன. ஆனால் இங்கு கோயிலும் இல்லை. அக்ரஹார தெருக்களில் ஜின்னா தெரு, காயிதே மில்லத் தெரு, ஹாஜியார் தெரு என்ற பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. உள்ளூர் நபர்கள் சிலரிடம் விசாரித்தபோது ஹிந்துக்கள் அக்ரஹாரத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி விட்டார்கள். இங்கிருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறினார்கள். திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்திலும், அடியக்கமங்கலத்திலும் அக்ரஹாரங்கள் அடியோடு மாறிவிட்டன. இங்குள்ள மசூதிகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களே அங்கு கோயில் இருந்தது என்பதற்கான சாட்சி. அடியக்கமங்கலத்தில் பாப்பாரக் குளம் என்று அழைக்கப்படும் குளத்தையொட்டி மிகப்பெரிய மசூதி உள்ளது. இங்கு ஒரு அக்ரஹாரம் இருந்திருக்கிறது. அந்த அக்ரஹார..
மேலும் படிக்க -இந்த லிங்கை அழுத்தி படிக்கவும் http://puduvaisaravanan.blogspot.com/2006_12_01_archive.html

அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன?



ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில்


ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.
டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), "இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன?
1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.
2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்.
3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.
4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.
5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.
6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.
7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில்


முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.
8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.
9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.
10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.
11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.
12. முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.
13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.
ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.
உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,
இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது,
முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.

விசமிகளை அடையாளம் காண்

சகோதரா இதனைப் பார்

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்

முத்துப்பேட்டையில் செல்போன் நீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்படு கிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.
ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.
சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த எண்ப்ங் நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரை யும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

மேலும் படிக்க http://nermai.blogspot.com/2007/10/blog-post_17.html

நன்றி மு மு

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது. பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன. இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தின ருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன் றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார் கள். ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த் தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன
1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)
9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15. சிக்கா பாரதி (21 லட்சம்)
16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21. வனவாசி கல்யாண் ஆசிரம்
22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24. சங்கல்ப்
25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)
26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)
27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)
29. சேவா பாரதி
30 பாரதீய விசார் கேந்திர்

சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரை யும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின் றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க http://tmmk.in/news/999603.htm
நன்றி.. த மு மு க இணையத்தளம்