சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Sunday, February 8, 2009

"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்": ராஜ்நாத் சிங்


பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழு கூட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட‌து. நேற்றைய (பிப்ரவரி 7) கூட்டத்தில் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது:

"மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதற்கு மாறாக பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இந்த கூட்டணி மேலும் வலுவடையும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆக்கப்பூர்வமானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் சிவசேனா, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. வரும் காலத்தில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்.

அத்வானியை போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட, பக்குவப்பட்ட தலைவர்கள் யாரும் மற்ற கூட்டணிகளில் இல்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். நாடு தற்போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ளது. பி.ஜே.பி. கட்சியால் இந்த சவால்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அயோத்தி பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்த அரசு 5 நிமிடம் கூட செலவிடவில்லை. ராமர் பாலம் பிரச்சினையிலும் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. ராமர் மீது பி.ஜே.பி. வைத்திருக்கும் நம்பிக்கையை யாரும் சீர்குலைக்க முடியாது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம். தேர்தலில் பி.ஜே.பி.க்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் இதற்காக சட்டமும் கொண்டு வரப்படும்.


மகாத்மா காந்தியின் போதனைகளை காங்கிரசார் யாரும் பின்பற்றுவதில்லை; சங்க பரிவார அமைப்புகள் மட்டுமே அவைகளை கடைப்பிடித்து வருகின்றன. மகாத்மா காந்தி அருளித்த போதனைகளை காங்கிரஸோ அல்லது அதன் பரிவார அமைப்புகளோ பின்பற்றுவதில்லை. பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள்தான் அதைக் கடைப்பிடித்து வருகின்றன. காந்தி என்ற குடும்பப் பெயரை மட்டும்தான் காங்கிரஸ் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். மகாத்மாவின் அரசியல் மரபுரிமைப் பண்புகள் மற்றும் காந்தியக் கொள்கைகளை எத்தனை காங்கிரஸார் பின்பற்றுகின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தனது கொள்கைகளில் காந்திய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தியது இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொள்கைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கச் செய்தனர். ஆனால் காந்தியின் இந்து ஸ்வராஜ்யத்தை கடைப்பிடிக்க மறந்துவிட்டனர் " என்றார் ராஜ்நாத் சிங்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, "ராமர் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பி.ஜே.பி. முயற்சிப்பதாகவும் எனவே ராமர் அவர்களை மன்னிக்கமாட்டார். உண்மையில் ராமர் கோவில் கட்டுவது பி.ஜே.பி.யின் நோக்கம் கிடையாது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது மட்டும் ராமர் கோவில் கட்டுவதாக உறுதி அளித்து விட்டு மக்களை ஏமாற்றி வருகிறது." என்றார் அவர்.

No comments: