சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Saturday, February 14, 2009

குளிர் பானம் அருந்தும் முஸ்லிம்களே எச்சரிக்கை!!


இந்தியாவில் மாட்டின் சிறுநீரைக் (மூத்திரத்தைக்) கொண்டு ஒரு குளிர் பானம் வருகிறது..

தட்ஸ்தமிழில் வந்த செய்தி இதோ:

கோக்குக்கு போட்டி-ஆர்.எஸ்.எஸின் 'கோமிய பானம்'!

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின் சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெள ஜல் என அது பெயரிட்டுள்ளது.
இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இது மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர் வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ்.
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள்தான் கோலோச்சி வருகின்றன. இவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும், இந்துத்வாவை இதிலும் புகுத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வகையில் இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவின் சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்துள்ளது.
2001ம் ஆண்டுதான் கோமியம், உடல் கோளாறுகளை குறிப்பாக கல்லீரல் பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்து என பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரசாரத்தைத் தொடங்கின என்பது நினைவிருக்கலாம். இதுதவிர உடல் பருமனையும் குறைக்கும் அரு மருந்து கோமியம். புற்று நோயைக் கூட இது குணப்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் கூறி வந்தன.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும்.
இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்.
தற்போது உள்ள அமெரிக்காவின் குளிர்பானங்களுக்கு எங்களது புதிய குளிர்பானம் கடும் போட்டியைக் கொடுக்கும். அவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவுள்ளோம் என்றார்.

உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தை ஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.

நன்றி: http://thatstamil.oneindia.in/news/2009/02/14/14-rss-to-launch-cow-urine-as-soft-drink.html

No comments: